உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்த்தீனியம் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

பார்த்தீனியம் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், களை மேலாண்மை பிரிவின் சார்பில், பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை, பயிர் மேலாண்மை இயக்குனர் செந்தில் துவங்கி வைத்தார். பார்த்தீனியம் களைச் செடி பற்றியும், அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உழவியல் துறை தலைவர் கிருஷ்ணன், களை மேலாண்மை பிரிவு பேராசிரியர் ராதாமணி, முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி