பயணியர் நிழற்கூரை இல்லாததால் சிரமம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கோவை ரோட்டில் வடக்கிப்பாளையம் பிரிவு உள்ளது. முக்கிய சந்திப்பு பகுதியான இவ்வழியாக வடக்கிப்பாளையம், சூலக்கல், புரவிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த பிரிவில், பஸ்சிற்காக நிற்கும் மக்களுக்கு நிழற்கூரை வசதியில்லாததால் சிரமப்படுகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கள் நிற்க இடமில்லாமல் அலைமோதுகின்றனர்.அங்கு கடைகள் ஆக்கிரமிப்பு போன்ற பிரச்னைகளால், மக்கள் ரோட்டிலேயே நிற்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுத்து, நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.