உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரியான முகவரியில் பாஸ்போர்ட் டெலிவரி

சரியான முகவரியில் பாஸ்போர்ட் டெலிவரி

பொள்ளாச்சி,; பாஸ்போர்ட்களை சம்பந்தப்பட்ட முகவரியில், சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்க வேண்டும், என, வெளியுறவுத்துறைஉத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அனைத்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், தலைமை தபால்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், நம்நாட்டில் வசிப்போர் வெளிநாடு செல்ல, வெளியுறவுத்துறையில் இருந்து பெறும் பாஸ்போர்ட்டை கட்டாயம் சம்பந்தப்பட்ட முகவரியில், உரியவரிடம் கொடுத்து கையொப்பம் பெற வேண்டும். மாற்று முகவரியிலோ, மாற்று நபரிடமோ சமர்பிக்கக்கூடாது.முகவரியில் உள்ள இடத்தில் வைத்து பட்டுவாடா செய்வதன் வாயிலாக விசாரணையினை நிறைவு செய்து வழங்குவதாக பொருள் கொள்ளப்படுகிறது.பாஸ்போர்ட்டின் போலி தன்மை குறித்து தொடர்ந்து புகார்கள் வருவதால், இந்திய தபால் துறைக்கும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை கட்டாயம் பின்பற்ற தபால்துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி