உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தார் கலவையில் ஒட்டு வேலை தினமலர் செய்தி எதிரொலி

தார் கலவையில் ஒட்டு வேலை தினமலர் செய்தி எதிரொலி

கோவை: குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய ரோடுகள் சீரமைக்காமல் இருந்ததால் சமீபத்தில் பெய்த மழைக்கு பெரிதாகின. லாரிகள், வேன்கள் குழிகளில் சிக்கின. வாகன ஓட்டிகள் அவஸ்தைக்கு உள்ளாகினர். ஏற்கனவே போட்ட பேட்ச் ஒர்க் வேலைகளும் தரமின்றி இருந்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வந்தன. இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைத்த லட்சணத்தை வாகன ஓட்டிகள் திட்டிக் கொண்டே கடந்து சென்றனர். மழை ஓய்ந்ததும் எந்தெந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டிருக்கின்றன என கண்டறிந்து அவசர அவசியம் கருதி, மாநகராட்சியால் ‘வெட் மிக்ஸ்’ கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டது. சில இடங்களில் பெரிய ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. இது வாகன விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மீண்டும் மழை பெய்யும்போது, கிரஸர் மண் தண்ணீரில் கரைந்து விடும்; ஜல்லிக்கற்கள் மட்டும் பரவிக் கிடக்கும்; விபத்தையே ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. தார் கலவை அல்லது கான்கிரீட் கலவை பயன்படுத்தி, பேட்ச் ஒர்க் செய்ய வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா கவனத்துக்குச் சென்றதும், அனைத்து இடங்களில் தார் கலவையில் ‘பேட்ச் ஒர்க்’ செய்ய வேண்டும். மீண்டும் கன மழை பெய்தாலும் அவை பெயர்ந்து வராத அளவுக்கு தரமானதாக போட வேண்டும்; சின்ன ரக ஜல்லிக்கற்களே பயன்படுத்த அறிவுறுத்தினர். அதன்படி, பிரதான சாலைகள் மட்டுமின்றி, குறுக்கு வீதிகளிலும் வெட்மிக்ஸ் கொட்டிய இடங்களில் தற்போது தார் கலவை ஊற்றி, பேட்ச் ஒர்க் செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இனி சிரமம் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை