உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டத்தரசி அம்மன் கும்பாபிஷேக விழா

பட்டத்தரசி அம்மன் கும்பாபிஷேக விழா

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம்புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம்புதூர் பட்டத்தரசியம்மன், வெள்ளையம்மன், பொம்மிஅம்மன் சமேத மதுரைவீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, 26ம் தேதி துவங்கியது.முளைப்பாளிகை, கோபுர கலசம், தீர்த்தக்குடம் கோவிலுக்கு எடுத்து வருதல், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாக வேள்வி, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று, 27ம் தேதி, காலை, விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை, கலசம் புறப்பாடு, கோபுர விமான கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து விநாயகர், பட்டத்தரசி அம்மன், மதுரைவீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகாதீபராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !