உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குப்பையில் கிடந்த மயில் தோகைகள்

 குப்பையில் கிடந்த மயில் தோகைகள்

கோவை: சிங்காநல்லுார் மாநகராட்சி காமராஜர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சாலையில் ரேஷன் கடைஉள்ளது.இப்பகுதியில் மாநகராட்சி குப்பை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் அங்கு குப்பை கொட்டி வருகின்றனர். சமீபத்தில் அந்த குப்பை குவியலில் மயில் தோகைகள் அதிகளவில் கிடந்தன. சில தோகைகள் முழுமையாகவும், பல தோகைகள் கிழிக்கப்பட்ட நிலையிலும் இருந்தன. பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மயில் இறைச்சி அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டு, அதன் தோகைகள் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை