மேலும் செய்திகள்
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுகோள்
15-Jun-2025
கோவை; தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின், முதல் மாநில மாநாடு தாமஸ் கிளப்பில் நடந்தது. சங்க மாநில அமைப்பாளர் நடராஜன் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், கூடுதல் ஓய்வூதியம் பெறும் வயதை 80லிருந்து 70 ஆக குறைக்க வேண்டும், இறந்து போகும் ஓய்வூதியர் குடும்பத்தாருக்கு குடும்ப நல நிதியினை உடனுக்குடன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டங்களை ஒழுங்குபடுத்திட வேண்டும், மாதந்தோறும் ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடத்தவேண்டும் உள்ளிட்ட, 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில இணை அமைப்பாளர் சுப்பிரமணியன், நிதி காப்பாளர் நாகராஜன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
15-Jun-2025