உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒப்பாரி வைத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

ஒப்பாரி வைத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !