மேலும் செய்திகள்
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை!
28-Jul-2025
கோவை : 'வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், 2021 தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பென்ஷனர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' என, ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வியக்கத்தின் மாவட்ட பொருளாளர் நாகராஜ் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் முக்கிய கோரிக்கை புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழையதை அமல்படுத்த வேண்டும் என்பதே. போராடி பெற்ற ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திருப்பது, அரசு ஊழியர்களின் உரிமையை பறிக்கும் செயல். 2021 தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச சட்டபூர்வ ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 70 வயது நிறைவடையும்போது, 10 சதவீதம் வீதமும், 80 வயது நிறைவடையும்போது மேலும், 10 சதவீதமும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள், தர்ணா போராட்டம் நடத்தி, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2026 தேர்தலுக்கு முன் வாக்குறுதி மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
28-Jul-2025