உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்த மருத்துவம் தேடி வரும் மக்கள்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

சித்த மருத்துவம் தேடி வரும் மக்கள்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

ஆனைமலை; 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வேட்டைக்காரன்புதுார் சித்தா பிரிவுக்கு, உடுமலை, கேரளா பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக பலரும் வந்து செல்கின்றனர். பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு அமைந்துள்ளது. இங்கு தம்மம்பதி, சரளப்பதி, சர்க்கார்பதி, மண்ணம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் பகுதிகளை சார்ந்த ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, மூட்டுவலி, தோல் நோய்களுக்கான மருந்து, சர்க்கரை பாதிப்பு, நாள்பட்ட ஆறாத விரணம் போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிரிவு, 'மாடல் சித்தா பிரிவு' போல செயல்படுகிறது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை படித்த மக்கள், ஆர்வமாக வந்து சிகிச்சை பெற்று செல்வதாக டாக்டர் தெரிவித்தார். சித்தா டாக்டர் நல்லதம்பி கூறியதாவது: வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவுக்கு, உள்ளூர் மக்கள் அதிகளவு வந்து சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, உடுமலை, தளி, கேரளா மாநிலம் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியூர் மக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை கண்டு வந்துள்ளோம் எனக்கூறி, சிகிச்சை பெற்றனர். மூலிகைகள் வாங்கிச் சென்றதோடு, இங்கு வந்து தொடர் சிகிச்சை பெறுவதாக கூறிச் சென்றனர். சித்தா பிரிவில் சிகிச்சை பெற மக்கள் ஆர்வமாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி