உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகர கடைகளில் மக்கள் உற்சாகம்! பூஜைப்பொருட்கள் பர்சேஸ்

மாநகர கடைகளில் மக்கள் உற்சாகம்! பூஜைப்பொருட்கள் பர்சேஸ்

கோவை: நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை காரணமாக, உதிரிப்பூக்களின் வரத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. விலையும் உச்சம் தொட்டுள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும், 10 டன் முதல் 12 டன் வரை உதிரிப்பூக்கள் வருவது வழக்கம். நேற்று ஒரு கிலோ மல்லி 1,200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை கிலோ 1,000 ரூபாய்க்கும், அரளி 320 ரூபாய்க்கு, ரோஜா 400 ரூபாய்க்கும், செவ்வந்தி மற்றும் சம்பங்கி கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் விலை குறையாது. உதிரிப்பூ வரத்து குறைந்தால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளது. செவ்வந்தி அதிகம் விற்பனையாகிறது' என்றனர். பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்கள், வாழைக்கன்று, கரும்பு, பொரி மற்றும் கடலை உள்ளிட்ட பொருட்களும் விலை அதிகரித்துள்ளன. பூமாலை, 200 முதல் 600 ரூபாய் வரை விற்கப்பட்டது. பூவன் பழம் டஜன் 80 முதல் 100 ரூபாய் வரை, ஆப்பிள் கிலோ 250 ரூபாய்க்கும், மாதுளை 220 ரூபாய்க்கும், சாத்துக்குடி 140 ரூபாய்க்கும், திராட்சை 160 ரூபாய்க்கும், ஆரஞ்சு 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. பொரி ஒரு படி 25 ரூபாய்க்கும், நிலக்கடலை கிலோ, 200க்கும், பொட்டுக்கடலை, 120 மற்றும் 140க்கும், வாழைக்கன்று ஜோடி 40க்கும், கரும்பு ஜோடி 150க்கும் விற்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி