உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் ஸ்டேஷன் அருகே வீணாகும் குடிநீர்; மக்கள் அதிருப்தி

போலீஸ் ஸ்டேஷன் அருகே வீணாகும் குடிநீர்; மக்கள் அதிருப்தி

வீணாகும் தண்ணீர்

கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் ஓரத்தில், பல நாட்களாக குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவு ரோட்டில் வழிந்து ஓடியபடி உள்ளது. இதனால், போலீஸ் ஸ்டேஷன் செல்லும் பொதுமக்கள் பலர் அவதிப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- பெருமாள், கிணத்துக்கடவு.

வேகத்தடை அமைக்கப்படுமா?

கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சர்வீஸ் ரோட்டில், எஸ்.எம்.பி., நகர் செல்லும் வழித்தடத்துக்கு முன்பாக, சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் ரோட்டில் செல்ல சிரமப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி விபத்தை தடுக்கும் வகையில் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.-- மனோகரன், கிணத்துக்கடவு.

ஆக்கிரமிப்பை அகற்றுங்க!

வால்பாறை நகரில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்து ரோட்டோரத்தில் கடை வைக்கப்படுகிறது. இதனால், பொது மக்கள் வாகனங்களில் செல்லும் பகுதியில், நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறிய அளவிலான விபத்து நடக்கிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - தர்ஷன், வால்பாறை.

குப்பைக்கு தீ வைப்பு

உடுமலை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் குப்பைகளை வைத்து தீ வைத்து எரிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதே போல், உடுமலை, சர்தார் வீதி எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பைக்கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் புகை அதிகமாக பரவுகிறது. வாகன ஓட்டுனர்கள் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.- ஜெயந்தி, உடுமலை

சாய்ந்த மின்விளக்கு

பொள்ளாச்சி, நியூ ஸ்கீம் ரோட்டில், சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் பொதுமக்கள் பலர் மின் கம்பம் சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பயணிக்கின்றனர். மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - ரேவதி, பொள்ளாச்சி.

துார்வார வேண்டும்

உடுமலை ஸ்ரீ நகரில் பூங்கா முன், மழைநீர் கால்வாய் துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, கால்வாயை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசுப்பள்ளியின் சுற்றுச்சுவரை திறந்த வெளிக்கழிப்பிடமாகவே மாற்றியுள்ளனர். அப்பள்ளி மாணவர்கள் மிகுதியான துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து அவ்விடம் கழிப்பிடமாக மாற்றப்பட்டு வருவதால், பள்ளி வளாகமும் துர்நாற்றம் வீச துவங்கிவிட்டது. மாணவர்களும் முகம் சுழிக்கின்றனர்.- ராகவன், உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில், தொடர்ந்து தளிரோடு சிக்னல் முதல் குட்டைத்திடல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கும் முடியாமல் சிக்கலான நிலை தொடர்கிறது.- விஜயன், உடுமலை.

துர்நாற்றம் வீசுது

உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாய் திறந்தவெளிக்கழிப்பிடமாக உள்ளது. அப்பகுதி வழியாக கடந்து செல்லவும் முடியாத நிலையில் அசுத்தமாக உள்ளது. இதில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.- ராமகிருஷ்ணன், உடுமலை.

குப்பையை அகற்றுங்க

உடுமலை, சத்திரம் வீதியில் குப்பைக்கழிவுகள் அரசு பள்ளியின் முன்பு திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதும் இல்லை. இதனால் தெருநாய்கள் அப்பகுதியில் கூட்டமாக கழிவுகளை இழுத்து பரப்புகின்றன. தெருநாய்கள் அதிகம் சுற்றுவதால் பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது. அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- ரவி, உடுமலை.

கழிவுகளால் துர்நாற்றம்

உடுமலை ரோடு, மின் மயானம் அருகே உள்ள இடுகாட்டின் சுற்றுச்சுவர் ஓரத்தில், அதிகளவு கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் செல்பவர்களுக்கு நோய் அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் இதை உடனடியாக அகற்ற வேண்டும்.-- ஆனந்த், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை