உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

அன்னுார் : கரியாம்பாளையத்தில், தனியார் தொழிற்சாலையால், துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 9ம் தேதி தொழிற்சாலையை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ., சுத்திகரிப்பு கருவி பொருத்தும் வரை தொழிற்சாலையை இயக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.எனினும் கடந்த 10ம் தேதி தொழிற்சாலை இயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நேற்று தொழிற்சாலை வாசலை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.தகவல் அறிந்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், மாசுக்கட்டுப்பாட்டு மாவட்ட பொறியாளர் சுவாமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா ஆகியோர் அங்கு சென்று, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ