உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநகராட்சி குறைகேட்கும் கூட்டத்தில் சாலை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை

 மாநகராட்சி குறைகேட்கும் கூட்டத்தில் சாலை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை

கோவை: பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி, துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் மனுக்களை பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் விபரம்: குனியமுத்துார் காந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்: 87வது வார்டு காந்திநகர் பூங்காவுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.19 லட்சத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. குறிச்சி குளக்கரை பகுதியில் 'நமக்கு நாமே' திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பினர்: எங்கள் நகரில் 140 வீடுகள் உள்ளன. 22 ஆண்டுக்கு முன் போட்ட சாலையாக இருக்கின்றன. முறையாக வரி செலுத்தும் குடிமக்கள் என்ற முறையில், எங்களுக்கு முறையான சாலை வசதி செய்து தர வேண்டும். ஒண்டிபுதுார் லேபர் காலனி பத்மகிருத்திகா: மூன்று மாதத்துக்கு முன், பாதாள சாக்கடை குழாய் பதிக்க, எங்கள் வீட்டு முன் குழி தோண்டிய போது, குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். மீண்டும் இணைப்பு வழங்க வேண்டும். நஞ்சுண்டாபுரம் ஆர்.ஆர். களிரு குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர்: 12 ஆண்டுகளாக 120 குடும்பத்தினர் வசிக்கிறோம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவையின்றி செலுத்தி வருகிறோம். குடிநீர் தேவையை போர்வெல் தண்ணீர் மூலம் சமாளிக்கிறோம். எங்கள் பகுதிக்கு 'பல்க் கனெக்சன்' வழங்க வேண்டும். குனியமுத்துார் பகுதி த.வெ.க., வினர்: 87வது வார்டு குறிஞ்சி நகர் பேஸ்-2 பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும். பிளேக் மாரியம்மன் கோயில் வீதியில் கால்வாய் துார்வாராமல் இருப்பதால் கழிவு நீர் தேங்குகிறது. ஜீவா நகரில் திறந்தவெளி கால்வாயை துார்வாரி, மூடி போட வேண்டும். மக்கள் நீதி மய்யம் 50வது வார்டு வட்ட செயலாளர் மோகன்: உடையாம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி வனப்பகுதி போல் தோற்றம் அளிக்கிறது. பூங்காவை சீரமைத்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை