உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் உரிமைத் தொகை கோரி சிறப்பு முகாமில் திரண்ட மக்கள்

மகளிர் உரிமைத் தொகை கோரி சிறப்பு முகாமில் திரண்ட மக்கள்

அன்னுார்; காட்டம்பட்டி மற்றும் குப்பேபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று கணேசபுரம் காளியப்பா மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை மாநில நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) செந்தில் வடிவு துவக்கி வைத்தார். சிறப்புத் திட்ட செயலாக்க அரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று மகளிர் உரிமைத்தொகை கோரி மனு அளித்தனர். இதில் பலர் கை குழந்தையுடன் வரிசையில் நின்றனர். முதலிபாளையத்தைச் சேர்ந்த ராதாமணி என்கிற பார்வை இழந்த பெண் வீடு பழுது பார்க்கும் திட்டத்தில் 55 ஆயிரம் ரூபாய் செலவில் வீடு பழுது பார்க்க அனுமதி பெற்றுள்ளார். எனினும் முழுமையாக வீடு பழுது பார்க்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தார். இதில் மகளிர் உரிமைத்தொகை கோரி 426 மனுக்கள் வந்திருந்தன. 116 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தாசில்தார் யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை