விளம்பர பலகைகளால் வழி தவரும் மக்கள்
கோவை: பல்லடம் எப்படிப்பா போகுறது...கொஞ்சம் முன்னாடி அரசே பலகைய வைச்சுருக்காங்க பாருங்க...அங்க பார்த்தேங்க அங்க மலுமிச்சம்பட்டி மற்றும் கோவைக்கு தான் வழி இருக்குங்க பல்லடம் வழி தெரியலையே...என்று பலரும் அருகில் இருக்கும் டீக்கடையில் கேட்கின்றனர். கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பு பலகையை மறைத்து தனியார் விளம்பர பலகை வைத்திருப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இப்படி அனைத்து இடத்திலும் விளம்பர பலகை இருப்பதால் அதுவும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் இருப்பதால் மக்கள் சுலபமாக ஈர்க்கப்படுகின்றனர் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது போகட்டும் என்று பார்த்தால் இப்போது அரசு வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை மறைத்து விளம்பர பலகையை வைத்துள்ளனர். இதனால் புதிதாக அப்பகுதிக்கு வரும் மக்கள் வழியை தெரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர். இதுபோன்ற பலகைகள் மற்றும் கண்ணைக்கவரும் வண்ணங்களில் வைக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.