உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுகளால் நீராதாரம் பாதிப்பு சிங்கையன்புதுார் மக்கள் புகார்

கழிவுகளால் நீராதாரம் பாதிப்பு சிங்கையன்புதுார் மக்கள் புகார்

பொள்ளாச்சி,; 'தனியார் நிறுவன கழிவுகளால் நீர் ஆதாரம் பாதிக்கிறது,' என, சிங்கையன்புதுார் கிராம மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கிணத்துக்கடவு தாலுகா சிங்கையன்புதுார் கிராம மக்கள், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு தாலுகா சிங்கையன்புதுார் பொட்டையாண்டிபுரம்பு கிராமத்தில், தனியார் நிறுவனம் கடந்த, நான்கு ஆண்டுகளாக செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில், கான்கிரீட் பீம், ரெடிமேட், கான்கிரீட் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.இங்கு இருந்து வெளியேறும் சிமென்ட் புகை, அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை வளர விடாமல் செய்கிறது.இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீரை, நிறுவனத்திற்கு உள்ளே பூமிக்கடியில் விட்டுள்ளனர். இதனால், அருகே உள்ள நிலங்களில் உள்ள போர்வெல்கள், கிணறுகளில் உள்ள நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இந்த நீர், குடிக்க உபயோகமற்றதாக மாறி வருகிறது.இந்த கழிவுநீர், மழைநீர்சேகரிப்பு குட்டையில் கலக்கிறது.இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி