உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவிப்பின்றி மின் வெட்டால் மக்கள் 3 மணி நேரம் தவிப்பு

அறிவிப்பின்றி மின் வெட்டால் மக்கள் 3 மணி நேரம் தவிப்பு

வால்பாறை;வால்பாறைக்கு அய்யர்பாடி துணை மின் நிலையம் வாயிலாக, மின்வினியோகம் செய்யப்படுகிறது. மின் பராமரிப்பு பணிக்காக மாதம் தோறும் மின் தடை செய்யப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணி முதல் 11:00 மணி வரை முன் அறிவிப்பு இல்லாமல், வால்பாறை நகரில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மக்கள் கூறுகையில், 'சமீப காலமாக முன் அறிவிப்பு இன்றி பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின் தடையால் பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க்கும் தடைபடுகிறது,' என்றனர்.மின்சாரவாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பச்சமலை எஸ்டேட் பகுதியில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது. ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால், 3 மணி நேரத்தில் மின்சப்ளை சீரானது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ