மோசமான சாலையால் பரிதவிக்கும் மக்கள்
அன்னுார் : அல்லப்பாளையம் வழியாக செல்லும் ரோடு சேதமடைந்து உள்ளதால் மக்கள் தவிக்கின்றனர். அல்லப்பாளையத்திலிருந்து, அம்மா செட்டி புதூர், திம்ம நாயக்கன்புதூர் வழியாக மொண்டிபாளையம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, தார் கரைந்து மண்சாலையாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர்.இதே போல் அல்லப்பாளையத்திலிருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள, கானுார் புதூர் வரை உள்ள சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த சாலையும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.