உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவிப்பின்றி மின் வெட்டு; தவிக்கும் மக்கள்

அறிவிப்பின்றி மின் வெட்டு; தவிக்கும் மக்கள்

வால்பாறை; வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்தின் வாயிலாக, மின்வினியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பெய்யும் நிலையில் இடையிடையே பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. முன் அறிவிப்பின்றி மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மின்தடை காரணமாக, தெருவிளக்குகள், எரியாமல், மக்கள் வன விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள், மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை