மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு 'காப்பு'
15-Apr-2025
கோவை,; செல்வபுரத்தில் உள்ள தி.மு.க., அலுவலகம் மீது, பச்சை பெயின்ட் ஊற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். செல்வபுரம், தெற்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 40; கூலி வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை, மது போதையில் இருந்த மணிகண்டன், தனது வீட்டில் இருந்த பச்சை நிற பெயின்டை 'மக்கில்' எடுத்துக்கொண்டு, செல்வபுரம் அண்ணாதுரை சிலை பகுதிக்கு சென்றார். அப்பகுதியில் உள்ள, 79வது வார்டு தி.மு.க., அலுவலகம் மற்றும் கலைஞர் படிப்பகம் அலுவலகத்தின் முன் பகுதியில், பச்சை பெயின்டை ஊற்றி விட்டு, அங்கிருந்து சென்றார். காலை அவ்வழியாக சென்றவர்கள், இதைப்பார்த்து விட்டு 79வது வார்டு தி.மு.க., செயலாளர் ஹக்கீமிடம் தெரிவித்தனர். அவர், செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, அவர் 15 ஆண்டுகளுக்கு முன் ஹிந்து முன்னணியில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
15-Apr-2025