கல்லுாரி மாணவியருக்கு ஆளுமை திறன் அவசியம்
கோவை: 'கலையால் கல்வி செய்வோம்' எனும் கருத்தை வலியுறுத்தி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் கலைத் திருவிழா நடந்தது. மாணவர்களின் மொழிப்பற்று, கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக, 30க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தன. பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நேற்று கல்லுாரியில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா பேசுகையில், ''கல்லுாரி மாணவர்களுக்கு ஏராளமான அரசு திட்டங்கள் உள்ளன. அதையறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இதுபோன்று பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவியர் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொண்டால் வெற்றி பெற முடியும்,'' என்றார். கல்லுாரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மனோன்மணி தலைமை வகித்தார். ஆங்கிலத் துறைத் தலைவர் அன்பழகன் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.