உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேட் கேர்ள் டீசரை தடை செய்ய மனு

பேட் கேர்ள் டீசரை தடை செய்ய மனு

கோவை; 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசரை தடை செய்ய கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு அளிக்கப்பட்டது.புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:படத்தின் டீசரில், பிராமண சமூக கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. குறிப்பாக பள்ளியில் படிக்கும் பிராமண சிறுமிகளை பற்றி, தவறான கருத்தை பரப்பும் வகையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பள்ளியில் படிக்கும் சிறுமியர் பாலியல் தவறு செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், தற்கொலை மிரட்டல் என, பல்வேறு தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.தமிழகம் முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த டீசர் அதை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே, இந்த படத்தை தடை செய்வதோடு, படத்தை தயாரித்தவர்கள் மற்றும் படத்தை புகழ்ந்து பேசும் ரஞ்சித், வெற்றிமாறன், விஜய் சேதுபதி போன்றவர்களையும், போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை