உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அனுமதியில்லாத ஜெபக்கூடங்களை மூட மனு

 அனுமதியில்லாத ஜெபக்கூடங்களை மூட மனு

தொண்டாமுத்தூர்: ஹிந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சூர்யா மற்றும் நிர்வாகிகள் இணைந்து, பேரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் சேகரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செல்வபுரம், பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர், மாதம்பட்டி, ஆலாந்துறை ஆகிய பகுதிகளில், வீடு கட்டுவதாக கூறி அனுமதி வாங்கிவிட்டு, சர்ச்களும், ஜெபக்கூடங்களும் நடத்துகின்றனர். இதை கண்காணித்து உரிய அனுமதி இல்லாமல் கட்டியுள்ள அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, அதை மூட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்