உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த மனு

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த மனு

கோவை:தமிழகத்தில் நலிந்து வரும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசு முன்வர வேண்டும் என, வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் அளித்த மனு: தமிழகத்தில் உத்தேசமாக, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சரக்கு வாகன ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, 15 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. ஓலா, ஊபர், ராபிடோ போன்றவைகளின் வரவால், ஆட்டோ ஓட்டுனர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகையவர்களுக்கு, ஆந்திர அரசு, ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர் சேவை' என்ற திட்டம் வாயிலாக, 1,500 ரூபாய் வழங்குகின்றது. தமிழகத்திலும், இதுபோல் நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை தலைவர் அசோக்குமார், ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் விக்னேஷ், மாவட்ட செயலாளர் விஷ்ணு, மாவட்ட துணை தலைவர் மணி செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ