பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
கோவை; சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'கணபதி புறநகர் திட்டத்தில் வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்து பெறப்பட்டது. 500 பேர் மாநகராட்சியிடம் அபிவிருத்தி கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்று கட்டடம் கட்டி மின் இணைப்பு, குடிநீர் வரி, சொத்து வரி செலுத்தி வருகின்றனர். 34 ஆண்டுகளாக, இப்பகுதியில் குடியிருக்கிறோம். இந்த இடம் வீட்டு வசதி வாரிய நிலம் என கூறி, பட்டா மாறுதல் செய்து தர மறுக்கிறார்கள். அவ்விடத்தை விற்கவோ, கடன் பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளனர்.