உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உணவு சார்ந்த இடங்கள் எதுவானாலும் செல்லப்பிராணி வளர்க்க அனுமதியில்லை

உணவு சார்ந்த இடங்கள் எதுவானாலும் செல்லப்பிராணி வளர்க்க அனுமதியில்லை

கோவை; ''மளிகைக்கடைகளும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு பெற்றிருக்க வேண்டும்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா எச்சரித்துள்ளார்.மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், முதல்கட்டமாக கேன் குடிநீர் தயாரிப்பாளர்கள், வினியோதஸ்தர்கள், ஷவர்மா மற்றும் துரித உணவு தயாரிப்பாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டம் நடத்தப்பட்டு உரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மளிகைகடைகள், பேக்கரி, உணவகங்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், சரவணம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மளிகை கடை ஒன்றில் பூனை வளர்ப்பதும், பயறு வகைகள், இடியாப்பம், போன்றவற்றில் உரிய லேபிள் விதிமுறைகள் பின்பற்றாமல் விற்பதும் கண்டறியப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. -மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''மளிகை கடைகளுக்கும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு செய்து இருக்கவேண்டியது அவசியம். உணவு பொருட்கள், உணவு அல்லாத பொருட்கள் தனித்தனியாக பராமரிக்க வேண்டும். எலி மருந்து போன்றவை மிக கவனமாக, தனியாக வைக்கப்படவேண்டும். வரும் வாரம், சரவணம்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடை உரிமையாளர்களுக்கு பயிற்சி நடைபெறும். உணவு சார்ந்த இடங்கள் எதுவானாலும், செல்லப்பிராணிகள் வளர்க்க அனுமதியில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை