/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதியதாக பொறுப்பேற்ற போப் ஆண்டவர் பொள்ளாச்சிக்கு வந்த போட்டோ வைரல்
புதியதாக பொறுப்பேற்ற போப் ஆண்டவர் பொள்ளாச்சிக்கு வந்த போட்டோ வைரல்
பொள்ளாச்சி : புதியதாக பொறுப்பேற்ற போப் ஆண்டவர், பொள்ளாச்சிக்கு வந்த போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலாகிறது.அமெரிக்காவைச்சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ரிவஸ்ட்,69. இவர், நேற்று, 267வது போப்பாக பதவியேற்றுக்கொண்டார். 14ம் லியோ, கடந்த, 2006ம் ஆண்டு பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள செண்பகம் பள்ளிக்கு வந்துள்ளார்.அகஸ்டினியன் சபையை சேர்ந்த நிர்வாகத்தினரால் நிர்வகிக்கப்படும், பள்ளிக்கு வந்து நேரில் ஆய்வு செய்து சென்றார்.பெரும்பாலான போப்புகளுக்கு, இந்தியா பற்றி அறிந்துள்ள வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்ட, 14ம் லியோவுக்கு தமிழகம், தமிழர்களை பற்றியும் நன்கு தெரிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது, இவர், பள்ளிக்கு வந்து சென்ற புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.