உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட் கைது

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட் கைது

கோவை; மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, பிசியோதெரபிஸ்ட்டை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 18 வயது மாணவி, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தாயார் உயிரிழந்ததால், தந்தை பராமரிப்பில் உள்ளார். அவருடைய அத்தை அடிக்கடி வீட்டுக்கு வந்து கவனித்துள்ளார். மாணவிக்கு, 15 வயது இருந்த போது, அவர் தனது சகோதரியுடன் அத்தை வீட்டுக்கு சென்றார். அங்கு மாணவி மற்றும் அவரது சகோதரிக்கு, பிசியோதெரபி செய்வதற்காக அவரது அத்தை, சாகின், 28 என்பவரை வரவழைத்தார். மாணவியின் சகோதரி பிசியோதெரபிக்காக, அறைக்குள் சென்ற போது சாகின், தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து அவர் அறையை விட்டு வெளியேறினார். மாணவியை அவரது அத்தை அறைக்குள் அழைத்துச் சென்றார். அப்போது சாகின், பிசியோதெரபி செய்வதாக, மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து சாகின், அவரது அத்தை ஆகியோர் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மாணவி இதுகுறித்து வெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மாணவி தனியாக செல்லும் போது, அவரை பார்த்த சாகின், தவறாக பேசியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி, கோவை மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், மாணவியின் அத்தையை கடந்த வாரம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சாகினை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை