உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்பது இடங்களில் குழாய் சீரமைப்பு

ஒன்பது இடங்களில் குழாய் சீரமைப்பு

கோவை: கோவைக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை பகுதியில், 6ம் தேதியில் இருந்து மழைப்பொழிவு இல்லை. நீர் மட்டம், 39.20 அடியாக இருந்தது. அதிகபட்சமாக, 9.85 கோடி லிட்டர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டது.வழியோர கிராமங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிக்கு தருவிக்கப்படும் பகுதிகளில், பிரதான குழாயில் ஆங்காங்கே கசிவு ஏற்பட்டிருந்தது. அதில், கெம்பனுார் முதல் மகாராணி அவென்யூ வரையிலான பகுதியில், ஒன்பது இடங்களில் கசிவு ஏற்பட்டது. தண்ணீர் வீணாவதை தடுக்க, குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேற்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக, 2.65 கோடி லிட்டர் மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை