உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெஸ்ட்டான செயல்பாட்டுக்கு பெஸ்டன் பம்ப்ஸ்

பெஸ்ட்டான செயல்பாட்டுக்கு பெஸ்டன் பம்ப்ஸ்

கா லமாற்றத்திற்கு ஏற்ப, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டு, சிறந்த பம்ப்கள் தயாரித்து வருவதாக பெஸ்ட் என்ஜினியர்ஸ் மற்றும் பெஸ்ட் குரூப் ஆப் கம்பெனிகளின் தலைவர் ஸ்ரீபிரியா கவுரி சங்கர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பெஸ்டன் பம்ப்ஸ் நிறுவனம், என் தந்தை கவுரி சங்கரால் 1970ல், 100 ரூபாய் முதலீட்டில்சிறிய அளவில் தொடங்கப்பட்டது. அப்பாவின் ஆர்வம், ஈடுபாடு, ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மையால், 1977ம் ஆண்டு அவர் வடிவமைத்த ஜெட் பம்புக்கு மகாராஷ்டிரா அரசின் டெண்டரில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதற்குப்பின், எங்கள் நிறுவனம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. மார்கெட்டில் ஏற்படும் மாற்றங்கள், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து, புதுவிதமான பம்ப்களை அறிமுகப்படுத்தியதால், சொந்தமாக ஏழு காப்புரிமைகள் வைத்துள்ளோம். அப்பாவிற்கு பின் இந்நிறுவனத்தை வழிநடத்தி வருகிறேன். தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் பம்புகள் விற்பனையாகி வருகின்றன. 2002ல், 75 ஹெர்ட்ஸ்ல் வேலை செய்ய கூடிய பம்ப் அறிமுகம் செய்துள்ளோம். பெஸ்டன் பம்ப்சின் தனிச் சிறப்பு அதன் தரம் தான்.எங்கள் இலக்கு தட்டுப்பாடின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். மேலும் சூரிய சக்தி ஆற்றலில் இயங்கும் பம்ப்களை தற்போது உற்பத்தி செய்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிராமப்புறத்தில் சிறப்பாக விளையாடும் குழந்தைகளுக்கு பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி, கோவை அத்லெடிக் கிளப் மூலம் ஆதரவு அளித்து வருகிறோம். அரசுப்பள்ளிகளுக்கு உபகரணங்கள், கட்டுமானத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். 55வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள, எங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய நம்பிக்கையாக வாடிக்யைாளர்களே உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை