பேரூர் பெரியகுளத்தில் பனை விதைகள் நடவு
தொண்டாமுத்தூர் : மண்ணும் மரமும் இயக்கம் சார்பில், பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, பேரூர் பெரியகுளத்தின் கரையில் நேற்று நடந்தது.இதில், மண் அரிப்பை தடுக்கவும், அழித்து வரும் பனை மரத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, பேரூர் பெரியகுளத்தின் கரைகளில், யாழ்ப்பாண வகையை சேர்ந்த, 1,000 பனை விதைகளை, நடவு செய்தனர். இதில், 'மண்ணும் மரமும்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ, நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர், கலந்து கொண்டனர்.