மேலும் செய்திகள்
தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க முடிவு
12-Dec-2025
மேட்டுப்பாளையம்: -: சிக்காரம்பாளையம் ஊராட்சியில், போக்குவரத்து நிறைந்த கல்குழி சாலையின் இரு பக்கம், செடிகள், முள் மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், சிக்காரம்பாளையம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் அதிகமான கல்குழிகளும், சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. அதனால் ஊராட்சியில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. சிக்காரம்பாளையம் கிராமத்தில் இருந்து, சின்னபுத்தூர், பெரியபுத்தூர் மற்றும் கல் குழிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபக்கம் செடிகள், முள் மரங்கள் புதர் போல் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியாக ஒரு வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த சாலையில் உள்ள முள் மரங்கள், செடிகள், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
12-Dec-2025