உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; மலைப்பாதையில் திக்திக் பயணம்

ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; மலைப்பாதையில் திக்திக் பயணம்

வால்பாறை ; வால்பாறை மலைப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தற்போது, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், விடுமுறை நாட்களில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் வால்பாறைக்கு வருகின்றன.இந்நிலையில், ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் ரோட்டின் இருபுறமும், செடிகள் ஆள் உயரத்துக்கு வளர்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், வாகனம் வரும் போது ஒதுங்க இடம் இல்லாமலும், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:தொடர் விடுமுறையால், வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்துள்ளனர். வாட்டர்பால்ஸ், கவர்க்கல், அய்யர்பாடி வரையிலான ரோட்டில், செடிகள் அதிக உயரத்துக்கு வளர்ந்துள்ளன.இதே போல், 40வது கொண்டைஊசி வளைவில் இருந்து, கருமலை பாலாஜி கோவில் செல்லும் ரோட்டில் செடிகள் அதிகளவில் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன.இதனால், யானைகள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ