உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு

 பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு

கோவை: ஸ்வச் பாரத் இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பார்க் கல்வி குழுமம் சார்பில்ல, கல்லுாரியின் என்.எஸ்.எஸ்.,மாணவர்களின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக்கின் தீமைகள், அவை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து என்.எஸ்.எஸ்., மாணவர்கள் விழிப்புணர்வு மேற்கொள்வார்கள். கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஐ.ஏ.எஸ்., வழிகாட்டுதலில், மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் குறித்து, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ விளக்கினார். பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி, பொது மேலாளர் சதீஷ்குமார், கோவை இன்ப்ரா 2 டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் அப்துல் வஹாப், திட்ட மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில், கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை