உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

பொள்ளாச்சி;ஆழியாறு சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணியரிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 ரூபாய்க்கு மஞ்சப்பை வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை, கவியருவி, மீன் பண்ணை, வால்பாறை, அட்டகட்டி சுற்றுலா தலங்கள் உள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர், பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை கொண்டு வந்து சாப்பிட்டு அப்படியே வனத்தில் வீசிச்செல்வதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, வனத்துறையினர், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அதற்குரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தற்போது, ஆழியாறு, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களாக, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை கொண்டு வருவோரிடம், அவற்றை பறிமுதல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையில், வனத்துறையினர், பிளாஸ்டிக் கவர்களை வாங்கி கொண்டு அதற்கு மாற்றாக, 10 ரூபாய்க்கு மஞ்சப்பையை வழங்கினர். மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரை சோதனை செய்து, அவர்களிடம் இருந்து பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து கூண்டில் சேகரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ