| ADDED : டிச 31, 2025 05:12 AM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், நடந்து வரும் நடன சங்கீத உற்சவத்தில் கலந்து கொள்ள வந்த, பிரபல மலையாள திரைப்பட பின்னணி பாடகர் பிரதீப் சோமசுந்தரன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல இசையை உருவாக்குவதற்கோ அல்லது நல்ல கேட்போரை உருவாக்குவதற்கோ, குழந்தைப் பருவத்திலிருந்தே இசையை கற்றுக்கொள்வது அவசியம். பொது தளங்களில் இருந்து துாய இசை விலகி வருவதற்கான முக்கிய காரணம், இளைய தலைமுறையினரிடையே இசையை ரசிக்கும் முறை மாறிவிட்டதே. இவ்வாறு, அவர் கூறினார். பின்னணிப்பாடகர் நிஷாத் கூறியதாவது: புதிய திரைப்படங்களில் மனதைத் தொடும் பாடல்கள் குறைவாகவே உள்ளன. சுதந்திரமாக பாடல்களை உருவாக்கும் பல இசைக்கலைஞர்கள் இங்கே உள்ளனர். ஆனால் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இங்கு எந்தவித ஆதரவோ, அங்கீகாரமோ இல்லை. புதிய இசைக் குழுக்கள் வெளிப்படையாக ஒழுங்கமைத்து வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பாடல்களின் புதிய போக்கினை அங்கீகரிக்கவும் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.