உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு; செல்பி எடுத்த மாணவியர் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு; செல்பி எடுத்த மாணவியர் 

- நிருபர் குழு -பிளஸ்-2 பொதுத்தேர்வு, நேற்று நிறைவடைந்த நிலையில், மாணவ, -மாணவியர் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 38 மையங்களில், தேர்வு நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், உயர்கல்விக்கு ஏற்ப அதிக மதிப்பெண் கிடைக்கும் வகையில், தீவிரமாக படித்து, தேர்வு எழுதினர்.அவ்வகையில், இறுதி நாளான நேற்று, இயற்பியல், பொருளியல் தேர்வு நடந்தது. மதியம் 1:15 மணிக்கு தேர்வு முடிந்து, வெளியே வந்த மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.பள்ளி பருவம் முடிந்து, இனி வரும் நாட்களில் கல்லுாரி படிப்பையும் தொடர உள்ளதால், ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிலர், சட்டையில் பேனா மை தெளித்து விளையாடினர்.சக நண்பர்கள், தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஓட்டல்களுக்கு ஒன்றிணைந்து சென்று, மதிய உணவு சாப்பிட்டனர்.* உடுமலை கோட்டத்தில், 18 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்ததையொட்டி, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பள்ளிப் பருவம் நிறைவடைந்ததை எண்ணி, மாணவர்கள், பிரியாவிடை அளித்தும் மகிழ்ந்தனர்.பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், பள்ளிக்கு முன் நின்று 'செல்பி' எடுத்தும், 'கேக்' வெட்டியும் கொண்டாடினர். பலரும் சட்டைகளில் மை தெளித்து விளையாடி, உற்சாகமாக கூச்சலிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி