712 விநாயகர் சிலை; போலீசார் அனுமதி
கோவை; விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாநகர பகுதிகளில், 712 இடங்களில் சிலை வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ttlxmirx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் உட்பட, 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சதுர்த்தி தினத்தன்றும் மற்றும் 29, 31ல் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் கரைக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குனியமுத்துாரில் நேற்று போலீசார் அணிவகுப்பு நடத்தப்பட்டது.