உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அஜித்குமார் மாதிரி என்னையும் போலீசார் அச்சுறுத்துகின்றனர்; கலெக்டரிடம் பா.ம.க., நிர்வாகி புகார்

அஜித்குமார் மாதிரி என்னையும் போலீசார் அச்சுறுத்துகின்றனர்; கலெக்டரிடம் பா.ம.க., நிர்வாகி புகார்

கோவை; கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்த பா.ம.க., நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி, தன்னை திருப்புவனம் அஜித்குமார் போல, போலீசார் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார். மை வீ 3 நிறுவனத்தில் 2,500 கோடி ரூபாய் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இளைஞரும், பா.ம.க., நிர்வாகியுமான அசோக் ஸ்ரீநிதி தனது தாயை தரக்குறைவாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பிரச்னை செய்ததாக, அசோக் ஸ்ரீநிதி மீது சைபர் கிரைம் ஆய்வாளர் அருண்குமார், வழக்குப்பதிவு செய்திருந்தார்.அதற்கு, 'ஐகோர்ட் தீர்ப்பின் படி போலீஸ் ஸ்டேஷனில் சி.சி.டி.வி., பொருத்தியிருக்க வேண்டும் அதில் நான் பிரச்னை செய்த வீடியோக்களை வெளியிடுங்கள்' என முறையிட்ட போது, 'சி.சி.டி.வி., இல்லை' என்கின்றனர் போலீசார்.ஐகோர்ட் தீர்ப்பை மதிக்காத போலீஸ்துறையினர், மை வி 3 நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் வகையில் தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக, புகார் தெரிவித்திருந்தார் ஸ்ரீநிதி.இது தொடர்பாக விசாரணைக்கு வரும்படி, வெளிநாட்டில் இருந்த அசோக் ஸ்ரீநிதிக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். வெளிநாட்டில் இருந்த அசோக் ஸ்ரீநிதி விசாரணைக்காக நேற்று வந்தார். ஆனால் போலீசார், இன்று விசாரணை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த அவர் கலெக்டரை சந்தித்து புகார் செய்தார்.அப்போது அவர், 'திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமாரை, போலீசார் தாக்கி கொலை செய்தது போல, தன்னையும் போலீசார் அச்சுறுத்தி வருவதாக' தெரிவித்தார். இது குறித்து விசாரிப்பதாக, கலெக்டர் உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை