உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாவட்ட எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் மாயம்

 மாவட்ட எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் மாயம்

உடுமலை: மாவட்ட எல்லையில் சிதிலமடைந்து காணப்படும், போலீஸ் சோதனை சாவடியை புதுப்பித்து, போலீசாரை நியமிக்க வேண்டும். கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையான அந்தியூரில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சார்பில் செக்போஸ்ட் அமைத்து, உடுமலை ஸ்டேஷனிலிருந்து போலீசார் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும், மாவட்ட எல்லையான அந்தியூரில் அமைக்கப்பட்ட போலீஸ் செக்போஸ்ட், தற்போது பயன்படாமல் வீணாக உள்ளது. போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செக்போஸ்ட்டில், மேற்கூரை மாயமாகியும், சிதிலமடைந்து காணப்படு கிறது. இதனால், இரு மாவட்ட எல்லையில் போலீஸ் கண்காணிப்பு இல்லாமல், குற்றச்சம்பவங்கள், கனிம வளக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, மாவட்ட எல்லையில், நிரந்தரமாக போலீஸ் சோதனை சாவடி செயல்படும் வகையில், கட்டடம் கட்டவும், போலீசார், பெண் போலீசார் பணியில் அமர்த்தும் போது, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்ட வேண்டும். அதே போல், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றச்சம்பவங்கள், கனிம வளக்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி