மேலும் செய்திகள்
குமிட்டிபதி வரை சாலை பணி தீவிரம்
02-Dec-2024
பொள்ளாச்சி கிழக்கு போலீசார், கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பெருமாள் என்கிற தங்கபெருமாள்,30, என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொழிலாளி தற்கொலை
பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ்குமார்,45. இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த அவர், பி.ஏ.பி., கால்வாய் அருகே மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பெண் பலி
கிணத்துக்கடவு, சங்கராயபுரத்தைச் சேர்ந்தவர் மவுனாத்தாள், 58. இவர், சொந்த வேலைக்காக, நல்லட்டிபாளையம் சென்று வீடு திரும்பினார். தாமரைக்குளத்தில் ரோட்டை கடந்த போது, அவ்வழியே வந்த ஆனைமலையைச் சேர்ந்த மதுசேகரன் ஓட்டி வந்த கார், மவுனாத்தாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலே இறந்ததாக தெரிவித்தனர். இரு மாத குழந்தை இறப்பு
கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, அக்., 18ம் தேதி, இரு மாதமான ஆண் குழந்தையை, கிணத்துக்கடவு சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பராமரிப்பில் இருந்த குழந்தையிடம், நேற்று முன்தினம் காலை எவ்வித அசைவும் இல்லாததால், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
02-Dec-2024