போலீஸ் செய்திகள்
கண்டக்டரை தாக்கியவங்கி ஊழியர் கைது
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், வால்பாறையில் இருந்து ேஷக்கல்முடி எஸ்டேட்க்கு, நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பஸ் (டிஎன் 38 என் 3468) இயக்கப்பட்டது.பஸ் திடீர் பழுதானதால் மெதுவாக சென்ற நிலையில், பழைய வால்பாறை செல்லும் போது, பஸ் இயக்க முடியாததால், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சில் பயணம் செய்த முருகாளி எஸ்டேட்டை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கார்த்திக்ராஜா, 24, பஸ்சை வீடியோ எடுத்தார். இதை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டர் பெரியசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கினார். அதில், கண்டக்டர் காயமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, கண்டக்டர் கொடுத்த புகாரின் பேரில் வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்ராஜாவை கைது செய்தனர். பஸ் மீது பைக் மோதியவிபத்தில் வாலிபர் பலி
வால்பாறை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சுதர்சன்,25. இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், எஸ்டேட்டில் நடந்த கோவில் திருவிழாவுக்காக நண்பருடன் வந்த சுதர்சன், நேற்று காலை பல்லடம் நோக்கி இருசக்கர வாகனத்தில், நண்பர் கவின்குமாருடன் சென்றனர்.வாட்டர்பால்ஸ் அருகே அதிவேகமாக சென்ற பைக், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த சுதர்சன், சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயமடைந்த கவின்குமார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து, காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.