மேலும் செய்திகள்
தங்கவயலை ரவுடிகள் இல்லா நகரமாக்க திட்டம்
22-Dec-2025
கோவை: குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை கட்டுப்படுத்தும் விதமாக, மீண்டும் அவர்கள் நகருக்குள் வருவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 15 குற்றவாளிகளை நகரை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். கோவை மாநகர போலீசாரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது, மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து, இங்கு நிபந்தனை ஜாமினில் வந்து கையெழுத்து இடும் குற்றவாளிகள், தொடர் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு ள்ளனர். பொதுமக்கள் மற்றும் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றவாளிகள், ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 158 பேரை, மாநகர எல்லையில் இருந்து ஆறு மாதங்களுக்கு வெளியேற, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தர விட்டார். இந்த ரவுடிகள் மீண்டும் மாநகர பகுதிக்குள் வருகிறார்களா என, போலீசார் கண்காணித்து வந்தனர். ஆறு மாத கெடு முடிந்த ரவுடிகள் பலர், கோவைக்குள் வந்துள்ளனர். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, பிரமாண பத்திரமும் பெறப்பட்டது. இந்நிலையில் மேலும், 15 குற்றவாளிகளை நகரை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்த பின், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பும் நடத்தப்படுவதாக, போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
22-Dec-2025