வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதிகார அரசு காவலர்கள், மக்களை மிரட்டியடித்து பணம் / பொருள் புடுங்கும்போது புதிய குற்றவாளிகளை தயார்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவேண்டும் சாமியோவ்.
மேட்டுப்பாளையம்: திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையில், நேற்று சுமார் 26 பேரை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, அவர்களது தற்போதைய நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரித்தனர்.அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன வேலைக்கு செல்கிறார்கள் போன்ற விவரங்கள் விசாரிக்கப்பட்டது. மேலும் அவர்கள் திருந்தி வாழ்வதற்கு, வாழ்வாதார உதவிகள் வேண்டுமா எனவும் கேட்கப்பட்டது. மேலும் இவர்கள் சிறையில் இருந்தபோது அங்கு ஏற்பட்ட நட்புகள் குறித்தும், அந்த குற்றவாளிகள் யாராவது மேட்டுப்பாளையம் எல்லைக்குள் வந்துள்ளனரா, எதாவது குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா எனவும் விசாரிக்கப்பட்டது.அவ்வாறு யாராவது குற்றசெயல்களில் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது, என்று மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறினார்.
அதிகார அரசு காவலர்கள், மக்களை மிரட்டியடித்து பணம் / பொருள் புடுங்கும்போது புதிய குற்றவாளிகளை தயார்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவேண்டும் சாமியோவ்.