உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி மோதி காவலாளி பலி போதை ஓட்டுனருக்கு கம்பி

லாரி மோதி காவலாளி பலி போதை ஓட்டுனருக்கு கம்பி

கோவை : கோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம், 52; தனியார் காவலாளி.இவர், நேற்று காலை பணி முடிந்து, புலியகுளம் - சவுரிபாளையம் சாலையில், தன் நண்பர் மணி, 35, என்பவருடன், 'டீ' குடிக்க நடந்து சென்றார். அவ்வழியாக, 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்யும் லாரி அதிவேகமாக வந்தது. கட்டுப்பாடின்றி வந்த லாரி, சாலை ஓரத்தில் நின்றிருந்த கார் மீது மோதியதில், நிலைதடுமாறி சாலையில் இடதுபுறம் மணி விழுந்தார். மருதாச்சலம் சாலையின் நடுவில் விழ, செப்டிக் டேங்க் லாரி, அவரது தலை மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே மருதாச்சலம் உயிரிழந்தார். லேசான காயங்களுடன் மணி தப்பினார்.லாரியை ஓட்டி வந்த, ராமநாதபுரம், காமராஜர் நகரைச் சேர்ந்த பிரவீன் குமார், 24, தப்பி ஓடினார். அவரை, பொதுமக்கள் பிடித்தனர். அவர், மதுபோதையில் நிதானம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிரவீன் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி