உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலியோ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

போலியோ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் சார்பில் போலியோ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்று பேசுகையில், போலியோவின் தாக்கம் ஒரு சில நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இருந்தாலும், அலட்சியமாக இல்லாமல்தொடர்ந்து கண்காணித்து விழிப்புடன் செயல்பட்டால்தான், போலியோவை முழுமையாக இந்த உலகத்தில் இருந்து விரட்ட முடியும் என்றார். முகாமையொட்டி, போலியோ தடுப்பு விழிப்புணர்வு பாடல் போட்டிகள் நடந்தன. சிறந்த விழிப்புணர்வு பாடல் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முகாமில் பங்கேற்றவர்கள் அனைவரும் போலியோ தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். முகாம் ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை