பொள்ளாச்சி அருகே ஆர்.எஸ்.எஸ்., பேரணி
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், விஜய தசமியை முன்னிட்டு, அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவா) ஆனைமலை கேந்திரம் சார்பில், விஜயதசமியை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே ராமநாதபுரம் முதல் மண்ணூர் பிரிவு வரை, 3 கிலோ மீட்டருக்கு தூரத்துக்கு அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மண்ணூர் மேற்கு பகுதியில் உள்ள பர்வதம் வே பிரிட்ஜ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த ஞானசரவணன், மணி சேகர், பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.