பொள்ளாச்சி பலாத்கார வழக்கு; சாட்சி விசாரணை முடிந்தது
கோவை; கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், சாட்சி விசாரணை நிறைவு பெற்றதால், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல், கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு,29, சபரிராஜன்,29, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, ஹெரன்பால்,34, பாபு,30, அருளானந்தம்,37, மற்றும் அருண்குமார் ஆகியோர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். இந்த வழக்கை சி.பி. ஐ., விசாரித்து, கோவை மகளிர் கோர்ட்டில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில், வாரந்தோறும் தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. புலன் விசாரணை அதிகாரிகள், இறுதி சாட்சியம் அளித்ததை தொடர்ந்து, சாட்சி விசாரணை நிறைவு பெற்றது. இரு தரப்பு இறுதி வாதத்திற்கு பிறகு, விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.