உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் அத்துமீறிய பொள்ளாச்சி வாலிபர் கைது

பெண்ணிடம் அத்துமீறிய பொள்ளாச்சி வாலிபர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பெண்ணை பின் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்து, அத்துமீறிய வாலிபரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொள்ளாச்சி அருகே, கணவன் வேலைக்கு சென்ற நிலையில், 25 வயது பெண், அதே பகுதியில் உள்ள கடையில் இருந்து வீட்டிற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர், மொபைல்போனை கேட்டு மிரட்டியுள்ளார். அதன்பின் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கையை பிடித்து இழுத்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, அருகிலுள்ள வீடுகளில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர், பல்லடம் ரோடு நந்தனார் காலனியை சேர்ந்த நிதிஷ்குமார்,24, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர். போலீசார் கூறுகையில், 'விசாரணையில், பெண்ணின் மொபைல்போனை பறிக்கவும், தவறாக நடந்து கொள்ளும் நோக்கத்தில் வீட்டினுள் நுழைந்து மிரட்டியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டதால் பிடிபட்டார்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை